EMANUEL LUBEZKI: Winning The Oscar for Cinematography For Three Years In A Row
00:20:00When you look around in our industry and our own work as a cinematographer, its always subjective, You are either defending yourself for not achieving greatness because you didn't have the gear or the time, some even feel superior to everyone else even when others feel their work is mediocre, its difficult to have an objective view.
Worse is when you feel , there is Nothing New to achieve, a lot of cinematographer suffer from a creative death.
Revenant, means a person who has returned, especially supposedly from the dead.
When some one creates history in our industry by winning the Oscar for cinematography for three years in a row, we need to understand the grand moment and listen to the man who created this film.
I found this audio interview where, I could feel that Emanuel Lubezki is an artiste who is also struggling with stalled film projects, production logistics, artistic goals, he too is an outsider... from Mexico.... He never comes across as a Guru who knows it all but as a keen student still in the process of discovering…
Comrades at Sica, we need to keep looking discovering, new ways to tell stories.
Rajiv Menon
ஒரு ஒளிப்பதிவாளராக நமது துறையில் நம் படைப்புகள் அனைத்துமே ஒரு உள் உணர்வு சார்ந்த ஒன்று. சில நேரங்களில் நாம் பெரிய இலக்குகளை அடையாமல் இருக்க காரணம், நமது திறமையை வெளிப்படுத்த சரியாண தருணம் அமையவில்லை அல்லது திறமையை வெளிப்படுத்த தேவையான தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கவில்லை என்பதும் தான். அதில் இன்னும் சிலர் தனது படைப்புகள் அனைத்துமே சிறந்தது என்ற மமதையில் இருக்கும் பொழுது மற்றவர்களுக்கு அது பெரிதாக தெரிவதில்லை. இதன்மூலம் நமது பணியில் ஒரு நடுநிலையான கண்ணோட்டம் அமைவது என்பது கடினம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் சிலரின் திறமைக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இத்துறையில் நாம் சாதிக்க புதியதாக ஒன்றும் இல்லை என்ற எண்ணமும் தான்.
ரெவெனென்ட்(Revenant) என்பதன் அர்த்தம், ‘ஒருவன் இறப்பில் இருந்து மீண்டும் உயிர் பெறுவது’ என்பதுதான்.
ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ஒருவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பெற்று சரித்திரம் படைத்த பொழுது, அப்பிரம்மாண்டமான தருணத்தை உணர்வதோடு மட்டும் இருந்து விடாமல், அப்படத்தில் அவர் பெற்ற வெற்றிக்கான காரணங்களையும் நாம் அறிய வேண்டும்.
இமானுவேல் லுபிஸ்கியின் (Emanuel Lubezki) இப்பேட்டியை நான் கேட்ட பொழுது, ஒரு கலைஞனாக தன்னை உயர்த்திக் கொள்ள, அவர் அடைந்த துயரங்களை என்னால் உணர முடிந்தது. மெக்ஸிகோ நாட்டிலிருந்து ஒரு ஒளிப்பதிவாளராக வேறொரு நாட்டிற்கு சென்று, பாதியில் நிறுத்தப்பட்ட படங்கள், தயாரிப்பாளர்களின் பட்ஜெட் நெருக்கடி என்ற பல தடைகளை தாண்டி, அவரது இலக்கை அடைந்துள்ளார். அவர் எப்பொழுதுமே தன்னை ஒரு கற்றுக் கொடுக்கும் ஆசானாக கருதாமல், இன்னும் பல புதிய விஷயங்களை மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் மாணவனாகவே கருதுகிறார்.
SICA தோழர்களே, நாமும் பல புதிய விஷயங்களை தேடி கற்றுக் கொள்வதன் மூலம், நம் கதைகளை அழகாக சொல்ல பல வழிகளை கண்டறியலாம்.
- ராஜீவ் மேனன்
'The Revenant' Cinematographer Emmanuel Lubezki Talks Finding The Natural Light:
'The Revenant' Cinematographer Emmanuel "Chivo” Lubezki - Variety Artisans
Alejandro González Iñárritu on Filming a Difficult Scene in 'The Revenant'
Cinematography Database Profile (2016)
Emmanuel Lubezki
4 comments