THE REVENANT MOVIE:

20:44:00


ஜனவரியில் நமது SICA சங்கத்தேர்தல் நடந்து, அதில் வெற்றி பெற்று சங்கத்தின் துணைத்தலைவராக பதவி ஏற்றிருக்கும் திரு.ராஜீவ் மேனன் அவர்கள் ஒன்றைக் குறிப்பிட்டார். 

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் (SICA) என்பது முதன்மையாக ஒளிப்பதிவாளர்களின் நலனை முன்னிறுத்தி செயல்படும். அதாவது, உறுப்பினர்களின் நலன், சம்பளப் பிரச்சனை, ஓய்வூதியம் மற்றும் மருத்துவக் காப்பீடு போன்றவற்றோடு ஒளிப்பதிவுத் துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், கலை மற்றும் அறிவியல் வளர்ச்சி போன்றவற்றை சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” 

மேலும், வாய்ப்புகள் அமையும் போதெல்லாம் ‘பயிற்சி வகுப்புகள்’ மற்றும் ‘ திரைப்படத் திரையிடல்’ நடத்தி புதிய தொழில் நுட்பங்களைப்பற்றி சங்க உறுப்பினர்களோடு பகிர்ந்துக்கொள்ளுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்றார். 

அவ்வகையில், இவ்வருட ‘ஆஸ்கார்’ விருதுக்கு ஒளிப்பதிவுப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களைப்பற்றியும், அதன் ஒளிப்பதிவாளர்களைப்பற்றியும் அண்மையில் ஒரு கட்டுரை எழுதினார். அக்கட்டுரை நமது சங்க வலைப்பூவில் பதிவேற்றப்பட்டுள்ளது. அப்படங்களைப்பற்றி சங்க உறுப்பினர்களிடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்த முயன்றார். மேலும், விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்களில் தற்போது சென்னையில் திரையிடப்பட்டிருக்கும் ஏதோனும் ஒரு திரைப்படத்தை, சங்க உறுப்பினர்களுக்காக திரையிட்டுக் காட்ட வேண்டுமென்றும் விரும்பினார். 

ஆயினும், தற்போதைய சூழலில் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரோடும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அல்லது உறுப்பினர்களுக்குத் தகவலைச் சொல்ல, இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று ‘குறுஞ்செய்தி’ (SMS), மற்றொன்று ‘அஞ்சல்’ (Postal). குறுஞ்செய்தியில் ஒரு கட்டுரையை அனுப்ப இயலாது, அஞ்சலில் ஒரு கட்டுரையை அனுப்ப, அதை பிரிண்ட் செய்ய வேண்டுமென்பதால் செலவு பிடிக்கும் விஷயம் அது. ஆகையால் அதை, ஒரு வலைப்பூவில் (Blog) பதிவேற்றியிருக்கிறோம். 

சங்க உறுப்பினர்கள் அனைவரோடும் தொடர்பு கொள்ள, அவர்களுக்கு ஒரு செய்தியைப் பரிமாற இருக்கும் சுலபமான வழிகள் இரண்டுதான். ஒன்று, சங்கத்திற்கென்று ஒரு வலைத்தளத்தை(Website) வடிவமைப்பது மற்றொன்று உறுப்பினர்கள் அனைவரையும் ‘மின்னஞ்சல் குழு’ (Email Group) வழியாக இணைப்பது. அதற்கான வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது. விரைவில் சங்கத்திற்கென்று தரமானதொரு வலைத்தளம் தயாராகி விடும். மின்னஞ்சல் குழு வழியாக உறுப்பினர்களை இணைக்க, ஒவ்வொரு உறுப்பினரும் தமது மின்னஞ்சல் விலாசத்தை நமது சங்கத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம். நண்பர்கள் அனைவரும் உடனடியாக அதைச் செய்து விடுங்கள். 

சங்க உறுப்பினர்களை ஒரு திரைப்படம் காண ஒன்றிணைக்க முடியாத தற்போதைய சூழலில், திரு. ராஜீவ் மேனன் அவர்கள், அவரால் தொடர்பு கொள்ள முடிந்தவர்களை ஒன்றிணைத்து ஞாயிறு (28-2-16) அன்று மாலை The Revenant  திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றார். திரு. ராஜீவ் மேனன், திரு. M.V.பன்னீர் செல்வம், திரு. முத்து கணேஷ், திரு.N.K. ஏகாம்பரம், திரு. இளம்பரிதி, திரு. ராஜவேல், திரு. மோசஸ் மற்றும் நான் ஆகியோர் சென்றோம். 


எல்லாவற்றிற்கும் ஒரு துவக்கம் வேண்டும். இது துவக்கமாக இருக்கட்டும், தொடர்ந்து இதைச் செய்வோம், இதை இன்னும் பெரிது படுத்தி நமது சங்க உறுப்பினர்களில், விருப்பம் கொண்டவர்களையும் இணைத்துக்கொள்வோம் என்றார். ஞாயிற்றுக்கிழமை என்பதனாலும், கடைசி நேரத்தில் திட்டமிடப்பட்டதனாலும் (காரணம், ஞாயிறு இரவு ஆஸ்கர் விருது விழா நடைபெற இருப்பதனால், அதற்கு முன்பாக படத்தை பார்த்துவிட வேண்டுமென்பதனாலும்) எந்தத் திரையரங்கிலும் டிக்கட் கிடைக்காமல், பின்பு விருகம்பாக்கம் INOX-இல் டிக்கட் முன்பதிவை அவரே செய்துவிட்டு தகவல் சொன்னார். படம் திரையிடப்படுவதற்கு முன்பாகவும், பின்பாகவும் பல தகவல்களை பரிமாறிக்கொண்டோம். அப்படத்தைப்பற்றி ‘American Cinematographer Magazine’ -இல் தான் படித்த தகவல்கள் பலவற்றை அவர் எங்களோடு பகிர்ந்துக்கொண்டார். பயனுள்ள ஒரு பொழுதாக அது இருந்தது.

நமது சங்க உறுப்பினர்கள் விருப்பம் கொண்டால், ஆர்வமிருந்தால் இவ்வகையான திரைப்பட அனுபவத்தில் கலந்துகொள்ளலாம். எண்ணிக்கை அதிகமாயின், திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசி, நமக்கென்று சிறப்பு காட்சியைக் கூட திரையிட வைக்கலாம் என்பது திரு. ராஜீவ் மேனனின் எண்ணம். அப்படியான சூழல் அமைந்தால் எத்தனை சிறப்பாக இருக்கும்.!? ஒளிப்பதிவாளர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து திரைப்படம் பார்ப்பதும், பின்பு அதைப்பற்றி விவாதிப்பதும் எத்தகைய ஆரோக்கியமான சூழலாக இருக்கும்..!? 

நண்பர்களே, இவற்றை நடைமுறைப்படுத்துவோம். ஆர்வம் இருப்பவர்கள் தகவல் சொல்லுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்று கூடுவோம். பகிர்ந்துக்கொள்வோம்.

நன்றி திரு. ராஜீவ் மேனன் சார்.


- விஜய் ஆம்ஸ்ட்ராங்


‘Revenant’ Cinematographer Emmanuel Lubezki Sets Record with Oscar Win
With his best cinematography win for Alejandro G. Inarritu’s “The Revenant” Sunday night, lenser Emmanuel Lubezki entered the record books as the first director of photography to claim the prize three years in a row. He also won for “Gravity” and “Birdman.”

The Revenant | Official Trailer [HD] | 20th Century FOX





பின்குறிப்பு: சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தகவல் சொல்லவில்லை என்று குறை கொள்ள வேண்டாம். விரைவில் அதற்கான வழிவகைகள் செய்ய முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிகழ்வு முழுக்க முழுக்க திரு. ராஜீவ் மேனன் அவர்களின் சொந்த முயற்சியால் நடந்தது. சங்கம் இதை ஏற்பாடு செய்யவில்லை. 

You Might Also Like

6 comments

  1. அருமையான பதிவு மற்றும் நல்ல முயற்சி .அடுத்த நிலையை நோக்கி முன்னேறுவோம்..

    ReplyDelete
  2. அருமையான முயற்சி. திரு ராஜிவ் மேனனுக்கு வாழ்த்துக்கள். சுகுமார்.வி 1986 Cinematography

    ReplyDelete
  3. நல்ல முயற்சி. திரு ராஜிவ் மேனன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஒளிப்பதிவாளர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து திரைப்படம் பார்ப்பதும், பின்பு அதைப்பற்றி விவாதிப்பதும் நிச்சயம் ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.

    அப்படி ஒரு தருணம் விரைவில் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

    ReplyDelete
  5. Great article Sica journey of bringing knowledge is awesome,thanks to our masters.

    ReplyDelete
  6. Great knowledge series happy to learn from prestigious body SICA.

    ReplyDelete