தமிழ் திரையுலகில் ஓர் இயக்குநர் பணியைத் தாண்டி மகேந்திரன், மணிரத்னம் ஆகிய இரண்டு மேதைகள் உருவாக பாலு மகேந்திரா பக்கபலமாக இருந்திருக்கிறார் என்று இயக்குநர் மிஷ்கின் பெருமிதத்துடன் பேசினார். இந்திய சினிமாவின் போற்றத்தக்க இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. பாலு மகேந்திராவின் மனைவி, மாணவர்கள், திரைப்பட ஆர்வலர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், நடிகை அர்ச்சனா, இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், எழுத்தாளர் பாமரன், தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் பாலு மகேந்திரா குறித்தும்...
இயக்குனர் பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான செழியன், தமிழில் நல்ல சினிமாவுக்காக தொடர்ந்து எழுதியும் பங்காற்றியும் வருபவர். இவரது உலக சினிமா நூல் புகழ்பெற்றது. புதிய இயக்குனர்கள், புதிய கதைக் களங்களில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் இயங்கிவரும் இவர் இயக்குனர் ராஜூ முருகனின் ஜோக்கர் படத்தில் பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளரான நீங்கள், சிறுகதை எழுத்தாளர், ஓவியர், புகைப்படக் கலைஞர், மேற்கத்திய இசையைக் கற்றறிந்தவர்… சினிமாவைக் கையாள்வதற்கும் இத்திறன்களுக்கும் என்ன தொடர்பு? சினிமா மீதான ஈர்ப்புதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. சின்ன வயதிலிருந்து அந்த ஆர்வம் இருந்துவந்திருக்கிறது. அப்பா,...
தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் thesica.in இணையதளம் தொடக்க விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. இவ்விழாவில் ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முதல் உறுப்பினர் எம்.ஏ.இரானி,தயாரிப்பாளர் ஏவி எம் சரவணன்,நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஆகியோர் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்கள். விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும் போது " எனக்கு "சிகா"வின் வெற்றி மகிழ்ச்சி தந்தது. நாங்கள் நடிகர் சங்க வெற்றியை விட 'சிகா'வின் வெற்றியை கொண்டாடினோம். அந்த அளவுக்கு எங்களுடன் பந்தம் உள்ளவர்கள் நீங்கள். நாங்கள் ;நடிக்க அனுபவம் ,அறிவு இல்லாமல் கூட வருவோம். ஆனால் நீங்கள் அறிவுடன்தான்...